சென்னை: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் நேற்று நடந்தது. அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடத்த முடிவு செய்து மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலக்குழு துணைத்தலைவர் மதிவேந்தன், இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், புஷ்பராஜ், வி.பி.இராசன், திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர்கள் துரைசாமி, தசரதன், மாரியப்பன் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.