சென்னை: கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞரின் உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்ததற்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, தலைவர் கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்ததற்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி. கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்தீர்கள். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு நீங்கள் அளித்த இதயப்பூர்வமான அஞ்சலிக்கு நன்றிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.