புதுடெல்லி: ஐக்கியநாடுகள் சபையின் இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐக்கியநாடுகள் சபைக்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்த ருசிரா காம்போஜ் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் ஐநாவுக்கான இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பி.ஹரிஷ் தற்போது ஜெர்மனி தூதராக பதவி வகித்து வருகிறார். இவர் விரைவில் ஐநாவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்க உள்ளார்.
ஐநாவுக்கான இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமனம்
previous post