திருவள்ளூர்: ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை மாநகர மாவட்ட தலைவர் லயன் இ.யுவராஜ் பரிந்துரையின் பேரில் செயல் தலைவரும், திருவள்ளூர் எம்பியுமான கே.ஜெயக்குமார் ஒப்புதலோடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு: ஆவடி மாநகர மாவட்ட முதன்மை துணைத் தலைவராக திருமுல்லைவாயல் விக்டரி எம்.மோகன், பொதுச்செயலாளராக கோனாம்பேடு எஸ்.சிவக்குமார், பொருளாளராக ஏ.ஆர்.ஆர்.ஹரிமுருகன், துணைத் தலைவர்களாக பொன்.பூபதி, ஆர்.கணேஷ்பாபு, கே.விஸ்வநாதன், மணீஷ், மணிகண்டன், ராஜா சரவணன், செல்வம் சௌந்தர், மேகலா சீனிவாசன், பத்மாவதி, காந்திமதி, விஜயலட்சுமி, அம்ரிஷ், பி.கோமேஷ், தனசேகர் கண்ணதாசன், செல்வராஜ், அரிதாஸ், வெங்கடாசலபதி, எம்.கஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஆவடி மாநகர மாவட்ட செயலாளர்களாக பிரபுதாஸ், பி.ராஜேந்திரன், ஜலால்பாய், சீனிவாசன், முருகன், ஜி.மனோகரன், ஜெயபிரகாஷ், பி.ராஜேஷ் பொன்னுரங்கம், டி.மோகனரங்கம், சரவணன், சுரேஷ்பாபு, பிரகாஷ், டி.ஜேம்ஸ்பால் ஆகியோரும், மண்டல தலைவர்களாக காமராஜர் நகர் பகுதிக்கு ஆர்.கோதண்டம், பட்டாபிராம் பகுதிக்கு ஏ.அமீத்பாபு, திருமுல்லைவாயில் பகுதிக்கு சுரேஷ்பாபு, பருத்திப்பட்டு பகுதிக்கு லயன் வி.சௌகத் அலி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.