வலங்கைமான், நவ. 8: வலங்கைமான் பகுதியில் முதல் கட்டமாக ஏழு கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போதைய திமுக அரசு கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட 119 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆவுடையார்நத்தம் பிள்ளையார் கோயில், வளையமாபுரம் ஆலமுத்து அய்யனார் கோயில், வலங்கைமான் வெள்ளாளர் தெரு அங்காளம்மன் கோயில், சந்திரசேகரபுரம் சந்திரசேகரர் கோயில், வலங்கைமான் வைத்தீஸ்வரனார் கோயில், தொழுவூர் நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், மாளிகை திடல் சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.