சென்னை: அண்ணா பல்கலைக்கழக போலி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் தவிர தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய தலையீடு செய்து உயர்கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.