டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் மூத்த அமைச்சர் ஆகியோர் கொண்ட குழுவானது தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின் செயல்பாடு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!!
0