சென்னை: திமுக வர்த்தகர் அணிக்கு மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்து அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் அறிவித்துள்ளர். இது குறித்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் வெயிட்ட அறிக்கை: கழக தலைவர் மு.க. ஸ்டாலினின் ஆணைப்படி மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக வர்த்தகர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். சென்னை தெற்கு மாவட்ட தலைவராக ராமமூர்த்தி, துணைத்தலைவராக துரைராஜ், அமைப்பாளராக விஜயபாலா, துணை அமைப்பாளர்களாக செந்தில், பிரஸ்கார்த்திக், திவாகர், கோவித்தராசன், சுரேஷ், செல்வராஜ், ஜெ.ஏ.துரை, ஏ.கே.துரை, சிவா, கட்டப்பராஜா, மத்தியாஸ், வேலாயுதம், சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை மேற்கு மாவட்ட தலைவராக சரவணன், துணைத்தலைவராக ரமேஷ், அமைப்பாளராக விஜயராஜ், துணை அமைப்பாளர்களாக வினாயசுந்தரம், ஜீவானந்தம், சவுந்தர்ராஜன், சம்பந்தம், கதிரவன், அமரேசன், மோகன், சந்திரகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக சிவக்குமார், துணைத்தலைவராக ரகுநாதன், அமைப்பாளராக நேதாஜி, துணை அமைப்பாளர்களாக மதியழகன், கார்த்திகேயன், கோபி, அரி எரும்பி, வாசு, கேசவன், பிரபாகர், பால்ராஜ், ஜெயவேல், ராஜேஷ்குமார், கதிரவன், செயசந்திரன் ஆகியோரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவராக ரவி, துணைத்தலைவராக சண்முகசுந்தரம், துணை அமைப்பாளராக தினேஷ் பாபு ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.