சென்னை: உயரழுத்த மின் இணைப்புகளை பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. உயரழுத்த மின்சார இணைப்பு பெற மின்பகிர்மான வட்ட அலுவலகம் அதாவது கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் சென்ற விண்ணப்ப படிவம் பெற வேண்டும். இந்நிலையில் உயரழுத்த மின் இணைப்புகளுக்கு இனி எளிதாக ஆன்லைனிலேயே விண்ணபிக்கலாம். இதன் மூலம் விரைவாகவும், எளிதாகவும் விண்ணப்பிக்கலாம், மேலும் விண்ணப்பத்தின் நிலையையும் கண்காணிக்க முடியும். மேலும் வணிக நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்ப இணைப்புகள் வழங்கப்படும். உயரழுத்த மின் இணைப்புகளுக்கு http://htbill.tnebnet.org:8080/htbill/consumerLogin என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மின் வாரிய தெரிவித்துள்ளது.