சென்னை: சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் நவ.20 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்திருந்தார். ஜெனரிக், பிற மருந்துகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்கள். www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.