தூத்துக்குடி: மேல்முறையீடு செய்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகை நிச்சயமாக கிடைக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைப்பாற்றின் குறுக்கே ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிண செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன்;
இந்த உயர்மட்ட பாலம் மூலம் 20 கிராம மக்கள் பயன்பெற உள்ளதாகவும், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்கள் பதிவேற்றத்தில் பிழை செய்துள்ளதால் தான் பணம் கிடைக்கவில்லை என்றும், மேல்முறையீடு செய்தவர்களின் மனு களஆய்வில் உள்ளதால் தொகை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.