எக்காலத்திலும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்வதால் யாரும் சோடை போக மாட்டார்கள். அப்படிப்பட்ட மொழிகளை சுலபமாகவும் எளிமையாகவும் கற்றுக் கொள்ள உதவுகிறது டியோலிங்கோ: லாங்குவேஜ் லெசன்ஸ் (Duolingo: Language Lessons) செயலி. “Learn a language for free. Forever” என்னும் வாசகத்துடன் வந்த இந்த செயலி, மொழிகளை மிகவும் எளிமையாகவும், விளையாட்டு அனுபவத்தோடும் கற்றுத் தருகிறது.இந்த செயலியின் முக்கியமான அம்சம் பயனாளர்களுக்கான மொழிப் பயிற்சிகள் படிப்படியாகவும் வண்ணமயமாகவும் இருப்பதுதான். புதிய வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கிய அமைப்புகள் போன்றவை கேள்வி-பதில், ஒலிப்பு, பொருத்துதல் போன்ற பல்வேறு பயிற்சி முறைகளில் வழங்கப்படுகின்றன.இந்த செயலியில் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பானீஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளலாம். தமிழருக்கேற்ப ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது.முக்கியமாக, தினசரி பயிற்சி நினைவூட்டல்கள், மதிப்பெண் கணக்குகள், விருதுகள் ஆகியவை பயனர்களை தொடர்ந்து கற்றுக் கொள்ள ஊக்குவிக்கின்றன.
டியோலிங்கோ செயலி!
0