Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அப்போலோ மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்காக முதியோர் பராமரிப்பு திட்டம்

சென்னை: அப்போலோ மருத்துவமனை மூத்த குடிமக்களுக்காக முதியோர் பராமரிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்கள், அவற்றுக்கான மருத்துவப் பரமாரிப்பு தீர்வுகள் இவை இரண்டுக்கும் இடையே இருந்து வரும் இடைவெளியை குறைக்கும் வகையில் \\\\”தி அப்போலோ எல்டர் கேர் ப்ரோக்ராம்\\\\” என்ற திட்டத்தை அப்போலோ மருத்துவமனை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் முதியோர் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரியங்கா ராணா பட்கிரி கூறியதாவது:

அப்போலோ மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தும் முதியோர் பராமரிப்பு திட்டமான ‘தி அப்போலோ எல்டர் கேர் ப்ரோக்ராம்’ மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முழு பராமரிப்பு நடைமுறைகளை தொடர்ந்து மேற்பார்வையிடவும், தேவையான பராமரிப்பு சேவைகளை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்காகவே ஒரு நம்பகமான மருத்துவர் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இதனால் நோயாளிகள் வீட்டிலோ அல்லது எங்கள் மருத்துவமனையிலோ எங்கிருந்தாலும், அவர்கள் தொடர்ச்சியான, அரவணைப்புடனான, ஒருங்கிணைந்த பராமரிப்பைப் பெறமுடியும்.

நோய் தடுப்பு மருத்துவம் மற்றும் நோயறிதல் முதல் மருத்துவமனை நடைமுறைகள், நோய் பாதிப்பிலிருந்து மீண்டெழுதல் மற்றும் மறுவாழ்வு பாரமரிப்பு வரை பராமரிப்பின் ஒவ்வொரு கட்டத்தையும் இந்த திட்டம் எளிதில் எதிர்கொள்ள உதவுகிறது. மேலும் மூத்த குடிமக்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு வழிகாட்டுதல், மருத்துவ ஆலோசனைக்கான 24/7 பெறும் வசதி மற்றும் ஒவ்வொரு முறையும் ஆலோசனைப் பெற வரும் போது அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகள் என மேம்பட்ட வசதிகளையும் இத்திட்டம் வழங்குகிறது.

இந்த முன் முயற்சி மூத்த குடிமக்களின் சுகாதாரப் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் முதுமைக்குரிய கண்ணியமும், மன நிறைவை அளிக்கும் ஆறுதலும் சிகிச்சைகளின் போது முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.