டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 197.75 சிசி, 4 வால்வு, ஆயில் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 20.8 பிஎஸ் பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 17.25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டூயல் சானல் ஏபிஎஸ், அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என 3 டிரைவிங் மோட்கள், ஸ்லிப்பர் கிளட்ச், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்டிவிட்டியை புளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளக்கூடிய வசதி, எல்இடி ஹெட்லாம்ப் உட்பட பல அம்சங்கள் உள்ளன. புதிய அம்சமாக தலைகீழ் வடிவ முன்புற சஸ்பென்ஷன்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. 200 சிசி பிரிவிலான அப்பாச்சி மோட்டார் சைக்கிள் முதல் முதலாக 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிரிவில் பல டிரைவிங் மோட்கள் கொண்ட ஒரே பைக் என்ற பெருமையை இது பெற்றிருந்தது. பின்னர் டூயல் சானல் ஏபிஎஸ் உட்பட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டன. புதிய மேம்படுத்தப்பட்ட அபாசி ஆர்டிஆர்200 4வி ஷோரூம் விலை சுமார் ரூ. 1,53,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.