சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவின் மனம் புண்படும்படி, சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். நமீதா வருத்தப்பட வேண்டாம்; மதுரை சம்பவத்திற்காக அவர் பெரிதளவு வருத்தப்படுவதாக இருந்தால் நாங்களும் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.