சென்னை: மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா நகரம் என்பதால், தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆண்டுதோறும் தொல்லியல் துறை நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, புராதன சின்னங்கள் பகுதியை பாதுகாத்து தூய்மையாக பராமரித்து வருகிறது.
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதி மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ஆகிய 2 இடங்களில் குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய உள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாமல்லபுரத்தில் தனியார் பங்களிப்புடன் எந்த மாதிரியான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தலாம்.
பயணிகளுக்கு பாதுகாப்பு வசதி உள்ளதா, மின்சார வயர்கள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ளதா, தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளதா, என இந்திய தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குனர் ஜான்விஜ் சர்மா கள ஆய்வு செய்து, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.