தேனி: ஆண்டிப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் 2ஆவது நாளாக காட்டுத் தீ எரிந்து வருகின்றது. ஏத்தகோவில் மலைப்பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீயால் ஏரளமான மரங்கள் எறிந்து சேதம் அடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 10பேர் கொண்ட வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.