அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சாலையில் சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் காரில் சிக்கி உயிரிழந்தார். ஆண்டிமடத்தில் உணவகம் நடத்தி வரும் அன்பழகன் என்பவர் தனது காரில் உணவகத்திற்கு சென்ற போது கட்டுப்பாட்டை லந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் காரில் இருந்த எரிவாயு கசிந்து கார் தீ பற்றி ஏறிய தொடங்கியது. இதில் காருக்குள் சிக்கி இருந்த அன்பழகனை மீட்க அக்கம், பக்கத்தினர் முயற்சித்த போதும் அவரை மீட்க முடியவில்லை. இதனால் அன்பழகன் காரிலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆண்டிமடம் காவல் நிலையத்தினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


