Thursday, February 29, 2024
Home » லஞ்ச ஒழிப்பு சோதனையை தடுத்த விவகாரம் அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு சம்மன்: இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

லஞ்ச ஒழிப்பு சோதனையை தடுத்த விவகாரம் அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு சம்மன்: இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

by Karthik Yash

மதுரை: மதுரை அலுவலகத்தில் நடந்த சோதனையை தடுத்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கித் திவாரி (32). இவர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டரிடம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் பணிபுரியும் மதுரை அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அங்கித் திவாரி ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது, ‘அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 35 மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. பணம் வசூல் செய்ய வைக்கப்பட்டிருந்த 75 பேர் பட்டியலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது’ என்று தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியபோது அவர்களை உள்ளே விடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் சார்பில் மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதேபோல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலக உதவி இயக்குநர் உட்பட பலர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் உதவி இயக்குநரை இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi