சென்னை: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளர். இந்தாண்டு மட்டுமல்ல; அடுத்தாண்டும் தேர்வுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது. சிண்டிகேட் மீண்டும் கூடி முடிவெடுக்கும் வரை அண்ணா பல்கலை. தேர்வு கட்டணம் உயராது என்று அமைச்சர் கூறியுள்ளார்