சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு வழங்குகிறது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த ஐந்தே மாதங்களில் தீர்ப்பு வெளியாகிறது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
0