சென்னை: சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார் சாலையில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 6பேர் படுகாயமடைந்த நிலையில் அதில் 2பேர் கவலைக்கிடம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 2பேர் தப்பியோடிய நிலையில் பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.