சென்னை: அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வில்லிவாக்கம் அல்லது ஓட்டேரி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வேலங்காடு மயானபூமியில் மின்மயான தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 07.06.2025 முதல் 09.06.2025 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள வில்லிவாக்கம் அல்லது ஓட்டேரி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.