சென்னை: சென்னை அண்ணா நகர் அருகே சிறுமி வன்கொடுமை வழக்கை நாள்தோறும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழக்கிற்கான சிறப்பு அமர்வை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். அண்ணாநகர் சிறுமி வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் எங்கே? விசாரணை அதிகாரிகள் பட்டியலில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்களா என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. வழக்கை நிலுவையில் வைத்தால் பல ஆண்டுகளுக்கு விசாரணை நீடிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement


