சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்காமல் கூட்டணி தலைவர்கள் புறக்கணித்தனர். ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை இன்று தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்காமல் கூட்டணி தலைவர்கள் புறக்கணித்தனர். அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் பிரேமலதா பங்கேற்குமாறு பா.ஜ.க. அழைப்பு விடுத்த நிலையில் புறக்கணித்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி, பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்கவில்லை. அண்ணாமலை தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அண்ணாமலையின் நடைப்பயணத்தை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருந்தார். அவருக்கு பதிலாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் மரியாதை நிமித்தமாக கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா பங்கேற்பார் என தேமுதிக அறிவித்திருக்கிறார்.