சென்னை: அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறாது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு எடுக்க முடியாது அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க முடியும். வடிவேலுவின் சூனாபானா காமெடி போல் பாஜக தலைவர் அண்ணாமலை நடந்துகொள்கிறார். பா.ஜ.க. அகில இந்திய தலைமை நினைத்தால் அண்ணாமலையை நாளையே மாற்றிவிடுவார்கள் என்று கூறினார்.