சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அண்ணாமலை தான்தோன்றிதனமாக பேசி வருகிறார்; அவரை போன்று பரிந்துரையால் கட்சிக்கு வரவில்லை. அண்ணாமலையைப்போல எடப்பாடி பழனிசாமி யாருடைய சிபாரிசின் பேரிலும் பதவிக்கு வரவில்லை. எஎடப்பாடி பழனிசாமி பற்றி விமர்சிக்க அண்ணாமலைக்கு தார்மீக உரிமையில்லை என கூறினார்.
தொடர்ந்து 2026 தேர்தலில் 4-வது இடத்துக்கு அதிமுக தள்ளப்படும் என்ற அண்ணாமலை பேச்சுக்கு பதிலளித்த அவர்; 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. மக்களவை தேர்தலில் ஒரு இடத்திலாவது தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெற்றதா? அண்ணாமலை மாநில தலைவரான பிறகு பா.ஜ.க. ஏற்கனவே வெற்றிபெற்ற கன்னியாகுமரியிலும் தோல்வியை தழுவியது. மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்பதால் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள அண்ணாமலை பேசுகிறார்.
தலைமை பொறுப்பு தொடர்ந்து இருக்காது என்று அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது. பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விரைவில் அக்கட்சியின் தலைமை அகற்றும் என்றும் கூறினார்.