அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னனையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி பாஜ தான் என்று அண்ணாமலை சொல்வதாக கேட்கிறீர்கள். 2 பேர் இருந்தாலே நாங்கள் பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளலாம். அண்ணாமலையின் கற்பனைக்கு எல்லை இல்லை. ஆசைக்கும் எல்லை இல்லை. கற்பனை செய்வது வேறு, நடைமுறைக்கு சாத்தியம் என்பது வேறு. பிரதமராக வர வேண்டும் என்று எல்லாரும் ஆசைப்படலாம். அதேபோன்று அண்ணாமலைக்கும் ஆசை வரலாம். அவரது ஆசையை சொல்கிறார். அதிமுகவின் பலம் மிகப்பெரிய பலம். பாஜகவுக்கு தாழ்த்தப்பட்ட ஓட்டு இல்லை, முஸ்லீம்கள் ஓட்டு இல்லை.
கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்கள் ஓட்டு இல்லை, சிறுபான்மையினரின் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஓட்டு இல்லை, ஏழைகளின் ஓட்டு இல்லை, நதிநீரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஓட்டு இல்லை, மொழி பிரச்னையை கொண்டு வர நினைப்பதால் அவர்களின் ஓட்டும் இல்லை, மக்கள் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தமிழகத்தில் பாஜவுக்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.