சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது அண்ணாமலை பொய்யான குற்றச் சாட்டுகளையும், அவதூறுகளையும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவதூறுகளை பரப்பிவந்தார்.
இது தொடர்பாக சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அண்ணாமலையின் கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனுவை தாக்கல் செய்தார்.