சென்னை: அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார் என்பது அவருக்கே தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி அதிமுகவினரை விமர்சனம் செய்வதை ஏற்க மாட்டோம். எங்களை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக் கூடிய சூழல் நிச்சயம் ஏற்படும் என்று ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர் விமர்சனம் செய்யும் நிலையை அண்ணாமலை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது என்று கூறியுள்ளார்.