சென்னை: பாஜ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நேற்று நடந்தது.தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல், கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டிகளை விரைந்து அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஊக்கமும், உற்சாகமும் அளித்து சாதனை படைக்க செய்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகிறோம். ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். பாஜ தலைவர் அண்ணாமலை யாத்திரையின் முதற்கட்டம், எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 2ம் கட்ட யாத்திரையானது வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. அயராது பாடுபடும் தலைவரின் முதற்கட்ட யாத்திரையின் நிறைவுக்கு பாராட்டுகள். இரண்டாம் கட்ட யாத்திரைக்கு வாழ்த்துகள் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.