சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைவரையும் அழித்து விடுவேன் என கூறுகிறார் அவர் என்ன எமதர்மராஜாவா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். மத்தியில் அதிகாரம் இருந்தும் தமிழ்நாடு மக்கள் வளர்ச்சிக்காக என்ன செய்து இருக்கிறார்கள்?. தனிநபர் விமர்சனத்துக்காக அண்ணாமலை பேச தயார் என்றால் நாங்களும் தயார். பாஜக தொண்டர்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணாமலை என்ன எமதர்மராஜாவா?: ஆர்.பி. உதயகுமார் கேள்வி
previous post