டெல்லி: அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்று அண்ணாமலை கூறினாலும் மேலிட தலைவர்கள் கூட்டணியை தொடர விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி முறிவால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அண்ணாமலையை சந்திக்க அமித்ஷா நேற்று நேரம் ஒதுக்கவில்லை. அமித்ஷாவை சந்திக்காத அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி முறிவு தொடர்பாக அண்ணாமலையிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாஜக மேலிடம் விளக்கம் கேட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.