சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு விவரம் வெளியானது. அதில் “பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றவும், மிரட்டவும் ‘சார்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி, தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது அறிவியல் பூர்வமாகவும் நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரிய வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற அரசுத் தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றவும், மிரட்டவும் ‘சார்’ என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியுள்ளார் : தீர்ப்பில் தெரிவிப்பு
0