சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 4 முதல் பிப்ரவரி 14 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பால் தொடர்ச்சியாக இன்று வரை பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அதனால் மேற்கண்ட பொறியியல் கல்லூரி தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள தேர்வு 11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 14ம் தேதி முடிய வேண்டிய தேர்வுகள் பிப்ரவரி 17ம் தேதி முடியும் என தேதி வாரியாக புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.