சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில், மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் வரும் 1ம் தேதி நடைபெறும் என்று திமுக மாணவர் அணி செயலாளர் ராஜிவ்காந்தி அறிவித்துள்ளார்.திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜிவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் வருகிற 1ம் தேதி காலை 11 மணியளவில் நடக்கிறது.
திமுக துணைப் பொதுச்செயலாளர், மாணவர் அணிப் பொறுப்பாளர் ஆ.ராசா எம்பி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் மாணவர் அணி மாநில நிர்வாகிகளான மன்னை த.சோழராஜன், சேலம் ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.கல்லூரிகள் தோறும் திமுக மாணவர் மன்றத்தை கட்டமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.