சென்னை: நாளை அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, தொய்வின்றி மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.