Wednesday, June 18, 2025

அபூர்வ தகவல்கள்

by Porselvi

* 108 நாகர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஒரு பாம்பு உடல் எங்கும் 108 சிறு நாகங்களை இடமாக கொண்ட மகா நாகத்தின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது.

* கங்காளர்: அந்தகாசுரனின் இரத்தம் வற்றித் தோல் சுருங்கி எலும்புக் கூடாகிய உடலை சுமந்துக் கொண்டு மூவுலகிலும் திரிந்த கோலமே கங்காளர் என போற்றப்படுகிறது.

* திருக்கொள்ளம்பூதூர்: அன்பர்களின் தாகத்தை தீர்த்து வைக்க பெருமான் குளம் வெட்டினார். அதிலிருந்து அம்பிகை தாகத்தை தணித்தார். இறைவன் குளம் கண்ட மகாதேவர், அம்பிகை மென்முலை நாச்சியார்.

* துவாதச ஆதித்ய வீதி: திருச்செங்காட்டாங்குடியில் துவாதச ஆதித்யர்கள் சிவலிங்கப்பெருமானை வணங்கிப் பேறு பெற்றார்கள். அவர்கள் பெயரால் இவ்வூரின் மேற்குவீதி துவாதச ஆதித்ய வீதி என அழைக்கப்பெற்றது.

* நீளவட்ட வடிவ சிவாலயம்: தமிழ்நாட்டில்-1தான் காஞ்சி ஜூரஹரேசுவரர் ஆலயம் அடித்தளம் தொடங்கி சுவர்கள் விமானம் உச்சியான கபாலக்கல் வரை நீளவட்டமாகவே அமைந்துள்ளன. உச்சியில் 3 கலசம்உள்ளன.

* தில்லை நடராஜர் பீடபெட்டகத்துள் உள்ள ஸ்பெடிக லிங்க சிவலிங்கமூர்த்தியை அழகிய சிற்றம்பலமுடையார் என்றும் சந்திரமௌலிகவரர் என்றும் அழைப்பார்.

* திருக்கடம்பூர்: இந்திரன் ரதம் சக்கரம் குதிரையுடன் விமானம் கருவறையை அகழ்ந்து எடுத்துசெல்ல முயன்றபோது விநாயகரை நினைக்காததால் அழுந்திய ரதத்தை எடுக்கமுடியாமல் விட்டதால் கரகோயிலானது.

* குன்றகுடி ஈசன் திருவடிகண்டேன் என்று பிரம்மா சொன்ன பொய் பாவம் தீர்ந்த இடம் சூரியனை விட்டு பிரிந்த உஷாதேவி முருகன் அருளால் திரும்ப பெற்றான்.

* அம்பிகை அருகில் முருகன் குகாம்பிகை: கற்சிற்பமாக திருக்கடையூர், திருமேனி பல்லவனீச்சரம், இடுப்பில் முருகன், வழுவூர், திருப்பனந்தாள், ஆரூர், திருப்புறம்பயம்.

* திருப்புகலூர் சோமாஸ்கந்தர் உற்சவர் மேனி அம்பாள் திருகரத்தில் நந்தி; அக்னி 2 முகம், 7 கரகங்கள், 3 திருவடிகள், 4 கொம்புகள், 7 ஜீவாலைகளுடன் கூடிய உருவம்.

* திருவானைக்கா: கும்பகர்ணனை கொன்ற தோஷம் நீங்க ராமன் குளம் அமைத்து லிங்க பிரதிஷ்டை தெற்கு பிரகாரத்தில் 108 லிங்கத்தில் 1-ல் முருகனும் 1-ல் விநாயகர் உருவம் உள்ளது. பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமி அன்னலட்சுமி என்பர். சிந்தாதேவி எனும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அளித்தவள்.

* பாணசூரன்: உபமன்யு முனிவரிடம் சிவதீக்ஷை பெற்று சிவனை பக்தி யுடன் வழிபட்டு சிவனிடம் தினமும் 1000 லிங்கங்களை ஒரே நேரத்தில் பூசிக்க 2000 கைகளைப் பெற்றான். அவனுக்கு அழியாத அக்னிக் கோட்டையை அளித்து ஈசன் தானே கோட்டைக் காவலனாக இருந்தார். அவன் மகள் உஷா கிருஷ்ணன் மகன் பிரத்யுமனனை மணந்தாள். (மன்மதன் மறுபிறவி) பின் கயிலையில் குடமுழா முழுக்குபவனாக இருக்கிறார்.

* சிவபராக்கிரமம்: சிவனின் 64-திருவுருவங்களையும் அவை உண்டாவதற்குக் காரணமான வரலாற்று நிலைகளையும் விவரித்துக் கூறுவதே சிவபராக்கிரம் என்ற நூல். இதில் வேதம், ஆகமம், புராணம், திருமுறைகள் ஆகியவற்றிலிருந்து உரிய சான்றுகளுடன் 64-திருமேனிகள் உண்டானதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், திருவண்ணாமலை, திருவாரூர் ஆலயத்திலும் மகேஸ்வர மூர்த்தங்களின் அழகான வண்ண ஓவியங்களைக் கண்டு மகிழலாம்.

* திருக்கழுக்குன்றம்: நான்கு வேதமும் மலைகளாக நின்றிருக்கும் தலம் வேதகிரி. 4 சிகரம். 4 வேதமாக உள்ளது. எவ்வொரு யுகத்திலும் ஒரு வேதமலையின் மீது ஈசன் உள்ளான். இப்போது அதர்வணவேத உச்சியில் உள்ளார். திருக்கழுகுன்றம் யுகத்திற்கு இருவராக 4-யுகங்களிலும் எண்மர் கழுகு வடிவத்திலும் பூஜித்து பேறு பெற்றனர். கிருதயுகம், சண்டன், பிரசண்டன். திரேதாயுகம், சம்பாதி, சடாயு. துவாபரயுகம், சமபுகுத்தன், மாகுத்தன், கலியுகம், பூஷா, விதாதா, விதாதா.

அருள்ஜோதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi