மதுரை :அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் நிபந்தனையை சற்று தளர்த்தி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பு வாதத்தை ஏற்று வாரம் ஒருமுறைக்கு பதில் 2 வாரத்துக்கு ஒருமுறை கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.