வானிலை அறிவியலில், அனிமோமீட்டர் என்பது காற்றின் வேகம் மற்றும் திசையை அளவிடும் ஒரு சாதனமாகும். இது வானிலை நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான கருவியாகும். வானிலை ஆராய்ச்சியாளர்கள் புயல், சூறாவளி போன்றவற்றைக் கணிக்க உதவுகிறது. அனிமோ மீட்டர் என்ற பெயர் பண்டைய கிரேக்கமொழியிலிருந்து வந்தது. விமான நிலையங்களில் விமானம் தரையிறங்க இக்கருவி உதவுகிறது. இக்கருவியில் சுழலும் தண்டு ஒன்றுடன் அலுமினியக் கிண்ணங்கள் இணைக்கப்பட்டிருக்கும். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது கிண்ணங்கள் அதிவேகத்துடன் சுழலும். இத்தாலியக் கட்டடக் கலைஞரும் எழுத்தாளருமான லியோன் பாட்டிஸ்டா ஆல்பர்ட்டி (1404-1472) என்பவரால் 1450இல் அனிமோமீட்டரின் முந்தைய அறியப்பட்ட விளக்கம் இருந்தது.
அனிமோமீட்டர் 15ஆம் நூற்றாண்டில் அதன் வளர்ச்சியிலிருந்து சிறிது மாறிவிட்டது. ஆல்பர்டி இதை 1450இல் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் ராபர்ட் ஹூக் (1635-1703) உட்பட பலர் தங்கள் சொந்த தயாரிப்புகளை உருவாக்கினர். ஒரு எளிய வகை அனிமோமீட்டர் 1845ஆம் ஆண்டில் அர்மாக் ஆய்வகத்தின் ரெவ். டாக்டர் ஜான் தாமஸ் ரோம்னி ராபின்சன் ராபின்சன் (1792-1882) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது . 1846இல் அரைக்கோளக் கோப்பைகள் மற்றும் இயந்திர சக்கரங்களைப் பயன்படுத்தி வடிவமைப்பை மேம்படுத்தினார். இது செங்குத்துத் தண்டு மீது பொருத்தப்பட்ட கிடைமட்டக் கைகளில் நான்கு அரைக்கோளக் கோப்பைகளைக் கொண்டிருந்தது .
எந்த கிடைமட்டத் திசையிலும் கோப்பைகளைக் கடந்த காற்று ஓட்டம் காற்றின் வேகத்திற்கு தோராயமான விகிதத்தில் தண்டை திருப்பியது. எனவே, ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்டின் சுழற்சிகளை எண்ணுவது, பரந்த அளவிலான வேகங்களுக்குச் சராசரி காற்றின் வேகத்திற்கு விகிதாசார மதிப்பை உருவாக்கியது. இந்த வகை கருவி சுழற்சி அனிமோமீட்டர் என்றும் அழைக்கப்படுகிறது . 1926ஆம் ஆண்டில், கனடிய வானிலை ஆய்வாளர் ஜான் பேட்டர்சன் (1872-1956) மூன்று கப் அனிமோமீட்டரை உருவாக்கினார். இது 1935ஆம் ஆண்டில் ப்ரெவோர்ட் மற்றும் ஜாய்னரால் மேம்படுத்தப்பட்டது. 1991ஆம் ஆண்டில், டெரெக் வெஸ்டன் காற்றின் திசையை அளவிடும் திறனைச் சேர்த்தார். 1994ஆம் ஆண்டில், ஆண்ட்ரியாஸ் பிஃப்லிட்ச் சோனிக் அனிமோமீட்டரை உருவாக்கினார். அனிமோ மீட்டர்கள் வேன் அனிமோமீட்டர், சூடான கம்பி அனிமோமீட்டர், லேசர் டாப்ளர் அனிமோமீட்டர், மீயொலி அனிமோமீட்டர் எனப் பல வகைகள் உள்ளன.