திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்சிகள் ராஜினாமா செய்தனர். ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல ராஜ்யசபா எம்.பி., எம்எல்சிகள் தங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாநிலங்களவை எம்.பிக்கள் 2 பேரும், எம்.எல்.சி. ஒருவரும் பதவி விலகினர். இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு எம்.எல்.சிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். எம்எல்சிகள் பல்லி கல்யாண சக்கரவர்த்தி, கர்ரி பத்ம இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி மற்றும் எம்எல்சி பதவிகளை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமேலவை தலைவரிடம் வழங்கினர். மேலும் பல எம்பிகள் மற்றும் எம்எல்சிக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். ராஜினாமாவுக்கு பிறகு தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளில் தங்களுக்கு ஆதரவாக யார் மற்ற பதவிகளை வழங்க முன் வரும் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்சிகள் 2 பேர் ராஜினாமா
previous post