திருமலை: அசாமில் உள்ள சில்காட்டில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த நாகோன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே நேற்று காலை வந்தது. அப்போது அடவிராஜுபாலம் – ஸ்ரீபுரம் ரயில் நிலையம் இடையே செல்லும்போது நாகோன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனே இதை அறிந்த லோகோ பைலட் எச்சரிக்கை செய்து ரயிலை நிறுத்தினார். இதனால் பீதியடைந்த பயணிகள் ரயிலில் இருந்து அலறி அடித்து கொண்டு உடமைகளுடன் முண்டியடித்துக்கொண்டு கிழே இறங்கினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பிரேக் பிடித்து கொண்டதால் புகை வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாக நாகோன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பரபரப்பு சென்னை ரயிலில் திடீர் புகை
69