Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் ஒரே நாளில் 3 இடங்களில் சோகம் காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி: நீரில் மூழ்கிய 5 சிறுவர்களும் சாவு

திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 9 சிறுவர், சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடியைச்சேர்ந்த தம்பதியினர் பர்லிஆனந்த்-உமா. இவர்களின் மகள்கள் ஜஷ்ரிதா(8), சாருமதி(7). அதே கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ்-அருணாவின் மகள் மானஷ்வினி(6). பக்கத்து வீட்டில் வசிக்கும் புச்சுநாயுடு-பவானி தம்பதியரின் மகன் உதய்(7). இந்த 3 குடும்பத்தினரும் நண்பர்கள். நேற்று முன்தினம் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் 4 குழந்தைகளும் சென்று விளையாடினர்.

அப்போது காரின் அனைத்து கதவுகளும் ‘ஆட்டோ லாக்’ ஆனது. இதனால் 4 சிறுவர், சிறுமிகள் மூச்சுத்திணறி அலறியுள்ளனர். ஆனால் அருகே உள்ள வீட்டில் திருமண விழா என்பதால் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பு செய்ததால் யாருக்கும் இவர்களது சத்தம் கேட்கவில்லை. இதற்கிடையில் மாலை வரை வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். மாலை 5.30 மணியளவில், ஒரு கட்டுமான தொழிலாளி காரின் அருகே சென்று ‘சைடு கண்ணாடியில்’ முகம் பார்த்துள்ளார்.

அப்போது காருக்குள் குழந்தைகள் அசையாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளூர்வாசிகள் மற்றும் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து கண்ணாடிகளை உடைத்து பார்த்தபோது அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை விஜயநகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். குட்டையில் மூழ்கி சோகம்: சித்தூர் மாவட்டம், குப்பம் தேவராஜபுரத்தில், 3 குழந்தைகளும், மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடேமில் ஜல்லேறு நீர்த்தேக்கத்தில் சிறுவர்கள் 2 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.