ஆந்திரா: ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் தொம்மனா பாவி எனும் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில பக்தர்கள் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை அருகில் உள்ள டோல்கேட் மற்றும் சுற்றுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திராவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
0