தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : ஆந்திரா முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,யில்,"நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதிவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமை, மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும். இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜயவாடாவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆந்திர முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் அப்துல்நசீர் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து, துணை முதல்வராக நடிகர் பவன்கல்யாண் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சந்திரபாபுவின் மகன் லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜகவுக்கு ஒரு அமைச்சரும், பவன்கல்யாண் கட்சிக்கு 3 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இலாகா இன்றிரவுக்குள் அறிவிக்கப்பட உள்ளது. சந்திரபாபுநாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், பிரபல சினிமா பிரபலங்கள், விஐடி பல்கலைகழக துணைத் தலைவர் செல்வம், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


