திருமலை: முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ்.விவேகானந்தா கொலை வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவை சி.பி.ஐ சாட்சியாக சேர்த்துள்ளது. ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் விவேகானந்தா கொலை வழக்கில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை சாட்சியாக சிபிஐ சேர்த்துள்ளது. இந்த கொலை வழக்கில் அவரை 259வது சாட்சியாக குறிப்பிட்டு சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது.
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது சிபிஐ இதனை தெரிவித்தது. அதில் கொலைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஆனால் கொலை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஷர்மிளா தெரிவித்தார். இந்த கொலைக்கு குடும்பம் மற்றும் நிதி விவகாரங்கள் காரணம் இல்லை என்றும், இதைவிட பெரிய காரணம் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கடப்பா எம்.பி. அவினாஷ் குடும்பத்தினருக்கு எதிராக விவேகானந்தா நின்றது தான் கொலைக்கு காரணமாக இருக்கலாம். கடப்பா எம்.பி. பதவிக்கு இடையூறாக இருப்பதை மனதில் வைத்திருந்திருந்து கொலை நடந்திருக்கலாம் என்று ஷர்மிளா சாட்சியம் அளித்ததாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 259 பேரிடம் சிபிஐ வாக்குமூலம் சேகரித்தது.