திருத்தணி: ஆந்திராவிலிருந்து பைக் மூலம் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனை சாவடியில் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 4 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
பைக் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடந்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த ஸ்ரீ(22). இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருவது தெரிய வந்தது. இவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.