*சமூக வலை தளத்தில் வீடியோ வைரல்
திருமலை : ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ பிறந்நாள் விழாவில் இசை நிகழ்ச்சியின்போது, பெண்களை வைத்து சினிமா பாடல்களுக்கு ரெக்கார்ட் டான்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷியில் ஆளும் கட்சி எம்எல்ஏ வேணுகோபாலின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, நடந்த இசை நிகழ்ச்சியில் பெண்களை வைத்து ரெக்கார்ட் டான்ஸ் ஆடினர்.
இதில், உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர்கள், இளம் பெண்களுடன் இணைந்து பாகுபலியின் மனோகரா போன்ற பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர்.
இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.