ஆந்திரா: ஆந்திராவில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 14 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூடூர் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காக்கிநாடா துறைமுகம் – திருப்பதி விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – டெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று ரத்து. சென்னை சென்ட்ரல் – ஹவுரா ரயில் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.