திருமலை: ஆந்திராவில் 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு 3300 மது கடைகளுக்கு அனுமதி வழங்கி தனியார் மூலம் விற்பனை நடக்கிறது. தனியார் மூலம் மது விற்பனை தொடங்கிய கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 9ம் தேதி வரை 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இதில் 61.63 லட்சம் மது பெட்டிகளும், 19.33 லட்சம் பீர் பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது. அனைத்து முன்னனி நிறுவன மதுவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் தனியார் மது கடைகள் திறக்கப்பட்ட 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மது விற்பனை
0